undefined

 ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை... காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் தேவை ! 

 
 

இஸ்ரேல்-காசா போர் தொடங்கி 2  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை கவலை எழுப்பியுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்புகள் பெரிதும் அழிந்துள்ளன.

ஐ.நா. அறிக்கை முக்கிய விவரங்கள்:

80% கட்டடங்கள் இடிந்து சேதம்: வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட 80 சதவீத கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

மொத்த சேதம் 4.5 டிரில்லியன் டாலர்: பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, காசா முழுவதும் பெரும் நெருக்கடியிலுள்ளன.

51 மில்லியன் டன் குப்பைகள்: இடிபாடுகள் வடிகட்டப்படவில்லை; அவற்றை அகற்ற 10 ஆண்டுகள் தேவையானதாகும்.

விவசாய நிலங்கள் அழிவு: 15,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் 98% தரிசாக மாறியுள்ளன; விவசாயம் மீண்டும் தொடங்க 25 ஆண்டுகள் ஆகலாம்.

கல்வி மற்றும் மருத்துவ சேதம்: 90% பள்ளிகள் சேதமடைந்து கல்வி பாதிப்பு, 94% மருத்துவமனைகள் அழிந்து சிகிச்சை சேவைகள் முடக்கப்பட்டன.

20 லட்சம் பேர் முகாம்களில்: வீடு இழந்த மக்கள் உணவு, நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி துயரம் அனுபவிக்கிறார்கள்.

இந்த அறிக்கை, காசா முழுவதும் உள்ள மனிதநேய நெருக்கடியையும், அதனை சமாளிக்க ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் விரைவு நடவடிக்கைகள் அவசியமென உணர்த்துகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள்: தற்போது எகிப்தில் நடைபெறும் அமைதி முயற்சிகளால் இந்த போருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.