வேலையில்லாத் திண்டாட்டம் 15.9% ஆக அதிகரிப்பு... திண்டாடும் இளைஞர்கள்!
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அதன்படி நாட்டில் பதினைந்து முதல் இருபது ஒன்பது வயது வரையிலான இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் பதினைந்து புள்ளி ஒன்பது சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு தேடும் இளைய சமுதாயத்தினரிடையே பெரும் கவலையும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் நாட்டில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டோரின் ஒட்டுமொத்த வேலையில்லா திண்டாட்டம் ஐந்து புள்ளி நான்கு சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் முப்பத்து இரண்டு புள்ளி ஏழு சதவீதமாக குறைந்து சரிவை சந்தித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
வேலவாய்ப்பின்மையை போக்குவதற்கும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.