ஆச்சரியத்தில் மூழ்கிய யுனெஸ்கோ.. கும்பகோணம் கோயிலுக்கு விருது வழங்கி கெளரவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள துக்காட்சி கிராமத்தில் ஆபத் சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலை ராஜராஜ சோழனின் முன்னோர்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோவில் கலை அழகுடன் கூடிய அழகிய சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினரின் முயற்சியால், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயிலில் திருப்பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இந்நிலையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள இக்கோயிலை யுனெஸ்கோ அமைப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். யுனெஸ்கோ அமைப்புகளும் இந்த கோவிலுக்கு நேரில் சென்று பரிசளித்துள்ளனர். பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!