தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

 

  தொகுதி மறுவரையறை மூலம் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (நவம்பர் 27) ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைச் சம விகிதத்தில் 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தவும், 2051-ஆம் ஆண்டு வரை தற்போதைய விகிதாச்சார வரம்பைப் பின்பற்றவும் இந்தத் திருத்தப்பட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் இதேபோன்ற முயற்சி நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது திருத்தங்களுடன் இந்த மசோதா மீண்டும் கொண்டு வரப்படுகிறது. வரும் நவம்பர் 30-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த முக்கிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், தேசிய அரசியலில் இந்த மசோதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது