மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - நிகழ்ச்சிகள் ரத்து!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் இன்று கலந்து கொள்ளவிருந்த முக்கியத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் இன்று நடைபெற்ற புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நேற்று இரவு ஹுப்பள்ளி சென்றடைந்த அமித் ஷா, இன்று காலையில் உடல்நிலையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தான் தங்கியிருந்த விடுதியிலேயே முழு ஓய்வு எடுத்து வருகிறார். அமித் ஷாவின் தற்போதைய உடல்நிலை குறித்த கூடுதல் மற்றும் அதிகாரப்பூர்வமான மருத்துவ விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.