மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நிறைவு - மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

 

டெல்லியில் உள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவைத் தொடர்ந்து, புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை அசௌகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் உட்படப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதயவியல் துறையில் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு, ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக இருந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 19-ஆம் தேதி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுத் தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.