UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூல் - சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

 

வணிக ரீதியிலான அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத் திருத்தம் தனிநபர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது. நுகர்வோர் - நிறுவனம் மற்றும் நிறுவனம் - நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதிக மதிப்புடைய யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் 'மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்' கட்டணத்தை வங்கிகள் வசூலிக்க இந்த மசோதா சட்டரீதியான வழிவகை செய்கிறது.

சிறிய அளவிலான வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்படாது எனவும், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இக்கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை எம்டிஆர் கட்டணம் உடனடியாக அமலுக்கு வரவில்லை. எவ்வளவு கட்டணம் வசூலிப்பது மற்றும் எப்போது நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து மத்திய அரசு பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். வணிகர்கள் மீதான இக்கட்டணத்தின் தாக்கம் மறைமுகமாக வாடிக்கையாளர்களையும் சென்றடைய வாய்ப்புள்ளது.