UPI பயன்படுத்துவோருக்கு குட் நியூஸ்...  ₹2,000 வரை கட்டணம் இல்லை!

 

 

ரூ.2,000 வரை செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பேமெண்ட் சேவை வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

.@IndiaToday claims that UPI transactions over Rs 2000 will be charged at 1.1%#PIBFactCheck
➡️There is no charge on normal UPI transactions.

➡️@NPCI_NPCI circular is about transactions using Prepaid Payment Instruments(PPI) like digital wallets. 99.9% transactions are not PPI pic.twitter.com/QeOgfwWJuj

— PIB Fact Check (@PIBFactCheck) March 29, 2023

ரூ.2,000 வரை UPI-க்கு கட்டணம் இல்லையா?

ஆம். ரூ.2,000 வரை UPI மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறிய அளவிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி மேற்கொள்ள முடியும்.

ரூ.2,000-க்கு மேல் UPI செய்தால் கட்டணம் வருமா?

இதுதான் தற்போது முக்கியமான கேள்வி. புதிய அறிவிப்பில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என அரசு கூறவில்லை. அதாவது, ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான MDR அல்லது பிற கட்டணத்தை இந்த அறிவிப்பு நிர்ணயிக்கவில்லை.

RuPay டெபிட் கார்டுக்கும் முக்கிய அறிவிப்பு

UPI மட்டுமின்றி RuPay மூலம் செய்யப்படும் டெபிட் கார்டு பணப்பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் சிஸ்டம் வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.