அவசர ஆலோசனை... தமிழக எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை ஆகஸ்ட் 8-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.. தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது, தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள கவலைகள் குறித்தும், அதனால் மாநிலத்திற்கு ஏற்படும் அரசியல் மற்றும் நிதிச் சார்ந்த தாக்கங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.