மனித பிரமிடுகள் அமைத்து  உறியடி விழா கோலாகலம்!

 

பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் உறியடி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உயரமான கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பானையை உடைக்க இளைஞர்கள் பிரமாண்டமான மனித கோபுரம் அமைத்து ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பானையை நெருங்க விடாமல் தண்ணீர் ஊற்றி தடுக்கும் முயற்சிகள் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டபடியே இளைஞர்கள் இலக்கை அடைந்து உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வுகளில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு இளைஞர்களை ஊக்கப்படுத்தியதோடு பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன.

மனித பிரமிடு அமைப்பது ஆபத்து நிறைந்தது என்பதால் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் புனேயில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.