கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது சிரிக்கத்தக்கது - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

 

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கில் கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரச் சார்பிலிருந்து விலகும் இலக்குடன் கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய திட்டமிட்டுள்ள நடவடிக்கை "சிரிக்கத்தக்கது" என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.

ஒருவேளை கனடாவைத் தங்கள் அமைப்பில் ஐரோப்பிய நாடுகள் இணைத்துக் கொண்டால், அந்த நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றும், வர்த்தக உறவுகள் உடனடியாகத் துண்டிக்கப்படும் என்றும் அவர் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பு கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த புதிய வர்த்தக நகர்வு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.