டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்கா பரிந்துரை!
Nov 15, 2026, 20:00 IST
கிழக்கு உக்ரைனில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுக்குமாறு உக்ரைனுக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ஈடாக இத்தகையதொரு சமரச யோசனை முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டிற்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்களும், நிதி உதவியும் உறுதி செய்யப்படுமானால், இது குறித்து நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அரசின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.