“வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டாம்” - அமெரிக்க வெளியுறவுத் துறை அவசர உத்தரவு!

 

சவுதி அரேபியா மற்றும் ஏமன் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்க குடிமக்கள் பயணம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. இதன் காரணமாக எவ்வித முன்னறிவிப்புமின்றி நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

அதிநவீன ஏவுகணை மற்றும் தற்கொலைப்படை டிரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால், எந்த நேரத்திலும் வான்வெளி மூடப்பட்டு விமானப் போக்குவரத்துகள் முழுமையாக முடக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 110-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மற்றும் தொடர்புடைய தூதரகப் பகுதிகளிலும் உள்ள அமெரிக்க அமைப்புகள் இந்த அவசர எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளன.

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளால் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், ஏற்கனவே அப்பகுதிகளில் தங்கியுள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.