ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; 19 பேர் பலி!

 

ஹர்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் தொடர் பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள லாரக் தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஏவுதளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா தனது முதல் கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஈரானின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள முக்கிய ராணுவ தளங்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்தும் அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்கா நடத்திய இந்த அதிரடித் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.