20,000 வீரர்களுடன் 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் களமிறக்கும் அமெரிக்கா - மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, நிலைமையைச் சமாளிக்க அமெரிக்கா தனது ராணுவப் பலத்தை அதிரடியாக அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 9,000 சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர் பனிப்போர் நிலவி வரும் நிலையில், சமீபத்திய வான்வழிச் சதிச் சம்பவங்கள் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளன. இந்நிலையில் புதிதாக அனுப்பப்பட்டுள்ள கப்பல் குழுவில் சுமார் 7,000 கடற்படை வீரர்களும், 2,000 கடற்படைப் பிரிவு வீரர்களும் அடங்குவர். இவர்களின் வருகையுடன் மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அரசு வெளிப்படையாக எச்சரித்துள்ளது. இந்த ராணுவ நகர்வுகள் சர்வதேச அளவில் பெரும் பரப்பபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக நாடுகள் மத்தியில் போருக்கான அபாயச் மணியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.