வெனிசுலாவுடன் அமெரிக்கா 25 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு!

 

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெனிசுலா நாட்டில் உள்ள 17 எண்ணெய் வயல்கள் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன. இதன் மூலமாக அங்குள்ள 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளது.

அமெரிக்கா தரப்பிலிருந்து சுமார் 10,000 கோடி டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் வழியாக வெனிசுலா நாட்டிற்கு 20,900 கோடி டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள இந்த எண்ணெய் ஒப்பந்தம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு முழுமையாக அமலில் இருக்கும் என்று வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி உறுதிப்படுத்தியுள்ளார்.