பிக்கப் லாரியைச் சுற்றிவளைத்த 4 கரடிகள்! பீர், தின்பண்டங்களை அள்ளிச் சென்ற வினோதம்... வைரல் வீடியோ!  

 

 

அமெரிக்காவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பிக்கப் லாரிக்குள் புகுந்த நான்கு கரடிகள், அதிலிருந்த தின்பண்டங்கள் மற்றும் பீர் பாட்டில்களை எடுத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

allowfullscreen

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் காட்லின்பர்க் பகுதியில் அக்டோபர் 14-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாம் கான்லி என்ற பெண்ணும் அவரது கணவரும் தங்களது பிக்கப் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர். பொருட்களை இறக்குவதற்கு முன்பாகவே அங்கு வந்த ஒரு கருப்பு நிறத் தாய் கரடியும் அதன் மூன்று குட்டிகளும் லாரிக்குள் புகுந்தன.

லாரியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த பொருட்களைத் தேடிய கரடிகள், முதலில் தின்பண்டங்கள் அடங்கிய பையை வெளியே இழுத்தன. பின்னர் ஆறு பீர் பாட்டில்கள் கொண்ட பெட்டியையும் வெளியே தள்ளின. இதனைப் பார்த்த தம்பதியினர் கரடிகளை விரட்ட முயன்றபோதும், அவை சிறிது நேரம் எதிர்வினையாற்றின.

இந்தக் காட்சியை பாம் கான்லி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். உணவுப் பொருட்களின் வாசனையால் கரடிகள் வாகனங்களைத் தேடி வரக்கூடும் என்பதால், வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வாகனக் கதவுகளைப் பூட்டி, உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.