பயனர்கள் அதிர்ச்சி... வாட்ஸ்அப்பில் கட்டணச் சேவையைக் கொண்டு வர மெட்டா நிறுவனம் முடிவு!

 

மெட்டா நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கும் நோக்கில், வாட்ஸ்அப்பில் புதிய சப்ஸ்கிரிப்ஷன் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டச் சோதனைகள் ஏற்கனவே சில நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக வாட்ஸ்அப் 'ஸ்டேட்டஸ்' (Status) பகுதிகளுக்கு இடையே விளம்பரங்களைக் கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது. இந்த விளம்பரங்களைத் தவிர்க்க விரும்புபவர்கள், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி 'Ad-free' சேவையைப் பெறலாம்.

'வாட்ஸ்அப் பிளஸ்' தனிநபர்களுக்கான புதிய பிரீமியம் சேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பின்வரும் பிரத்யேக வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது: தற்போது 3 சாட்களை மட்டுமே 'பின்' செய்ய முடியும். பிரீமியம் பயனர்கள் 20 சாட்கள் வரை பின் செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியின் நிறம் மற்றும் ஐகானை மாற்றிக்கொள்ளும் வசதி (14 புதிய ஐகான்கள் வரை).

குறிப்பிட்ட நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பிரத்யேக நோட்டிபிகேஷன் ஒலிகளை அமைக்கும் வசதி. இந்தச் சேவை முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சுமார் 4 யூரோ (இந்திய மதிப்பில் ₹430) என்ற அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு 'மெட்டா வெரிஃபைட்' என்ற பெயரில் மாதம் சுமார் ₹1,300 (அமெரிக்காவில் $15) கட்டணத்தில் ப்ளூ டிக் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.