டிராக்டர் டிராலி மீது லாரி மோதி கோர விபத்து… 5 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம்!
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி மீது லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#WATCH | Sitapur, Uttar Pradesh | On the death of 5 people in a collision between a tractor-trolley and a truck, District Magistrate Dr Rajaganapathy R says, "Some people were returning from a *mundan* (tonsure) ceremony... Five people have died in the incident. 17 others were injured, 5 of whom have been referred to the district hospital... A team of doctors is waiting there; they will receive proper medical care. We stand with the family and will provide all possible assistance."
— ANI (@ANI) November 6, 2026
சீதாப்பூர் மாவட்டம் பிசாவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிம்மத்நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற மொட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சுமார் 22 பேர் டிராக்டர் டிராலியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் டிராலி மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராலி சாலையில் கவிழ்ந்தது. அதன் அடியில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 5 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து லக்னோ சரக ஐ.ஜி. கிரண் கூறுகையில், அதிவேகம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். விவசாயப் பயன்பாட்டுக்கான டிராக்டர் டிராலியில் பயணிகளை ஏற்றிச் செல்வது விதிமீறல் என்றும் அவர் எச்சரித்தார். விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.