"வாடி ராசாத்தி".. மகளிர் தினத்தில் வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 

சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தமிழகப் பெண்களின் முன்னேற்றத்தை விளக்கும் வகையில் "வாடி ராசாத்தி" என்ற பாடலுடன் கூடிய சிறப்புத் தொகுப்பு வீடியோவைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். "வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது!" என அவர் குறிப்பிட்டுள்ளார்.