கடற்படை பலத்தை அதிகரிக்கும்  வடகொரியா ... 5,000 டன் எடையுள்ள ‘காங் கான்’ போர்க்கப்பல் இணைப்பு!

 

வடகொரியா தனது கடற்படை பலத்தை அதிகரிக்கும் வகையில் சுமார் 5,000 டன் எடையுள்ள ‘காங் கான்’ போர்க்கப்பலை அணு ஆயுதப் படையில் இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்தப் போர்க்கப்பல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்படையின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்டதாக இந்த நவீன கப்பல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் கடற்படை திறனும் போர் ஆற்றலும் மேலும் பலமடங்கு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு சர்வதேச நாடுகளின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

வடகொரியாவின் இந்த ஆயுதப் பெருக்கம் உலக அரங்கில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. பாதுகாப்புத் துறையில் அந்நாடு தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கைவசம் படுத்தி வருவதை இது காட்டுகிறது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளால் அப்பகுதியில் நிலவும் அரசியல் சூழல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.