வால்பாறை திமுக எம்.எல்.ஏ. வெற்றிக்கு எதிராக வழக்கு - தவெக வேட்பாளர் ஸ்ரீதரன் மனு!
Sep 15, 2026, 17:10 IST
வால்பாறை தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. சுதாகரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், போலி சாதிச் சான்றிதழ் அளித்துத்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுதாகரிடம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஸ்ரீதரன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில சரிபார்ப்புக் குழு ஆகியோர் வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள் தங்களது பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.