கொடைக்கானல் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்: 3 பேர் பலி; 16 பேர் படுகாயம்
கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.
கொடைக்கானலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பழனி மற்றும் உடுமலைப்பேட்டை நோக்கி 24 பயணிகளுடன் வேன் சென்று கொண்டிருந்தது. சாவரிக்காடு அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 100 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.மலைப்பாதையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.