வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்... இன்று மதுரையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
இன்று மதுரையில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டி, திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை தொண்டி சாலை, அண்ணா பேருந்து நிலையச் சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து, சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடையும் இந்தச் சாலை, மதுரை மற்றும் சிவகங்கையை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளதாலும், போக்குவரத்துச் செறிவு அதிகமாக இருப்பதாலும், மூன்று சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.
இந்தப் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையிலும், நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லும் வகையிலும், 950 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்து, சிவகங்கையை மீட்டெடுத்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பெருமையைப் போற்றும் வகையில் இந்த முக்கியமான மேம்பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!