அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்... விசிக மாநாட்டிற்குச் சென்றவர்களுக்கு விபத்து; 12 பேர் படுகாயம்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்களின் வாகனம், செங்கல்பட்டு அருகே விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் விசிக மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்த தொண்டர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.