வேளாங்கண்ணி பேராலயம் அக்டோபர் 3 முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆண்டு முழுவதும் தினமும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தடங்கலற்ற தரிசனம்: தஞ்சை மறைமாவட்ட உதவி ஆயர் சகாயராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த முக்கிய முடிவை அறிவித்தார். வழக்கமாக இரவு நேரங்களில் பேராலயத்தின் நடை சாத்தப்பட்டு வந்த நிலையில், இனி வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் பேராலயம் எப்போது திறந்திருக்கும்.
-
பயணிகளுக்குப் பெரும் பயன்: தொலைதூர மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் வேளாங்கண்ணிக்கு வந்து சேரும் பக்தர்கள், இதுவரை பேராலயம் திறக்கும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் பக்தர்கள் எப்போது வந்து சேர்ந்தாலும் நேரடியாகப் பேராலயத்திற்குச் சென்று அன்னையைத் தரிசித்துச் பிரார்த்தனை செய்ய முடியும்.
-
பாதுகாப்பு ஏற்பாடுகள்: நள்ளிரவு நேரங்களிலும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், பேராலய வளாகம் முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பேராலய நிர்வாகத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, உலகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் லட்சக்கணக்கான ஆன்மீகப் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.