கணவர் இறந்த சில நாட்களில் சோகம்! 7 மாத கர்ப்பிணி தற்கொலை!

 

 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கணவர் இறந்த சோகத்தில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கே.வி.குப்பம் அருகே கவசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (34). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் மோனிஷா (28) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி சரத்குமார் திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மோனிஷா, கணவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

 

இந்த நிலையில், கணவர் இறந்த சில நாட்களிலேயே மோனிஷாவும் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த மரணங்கள் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.