வேலூரில் 36 சவரன் நகை திருடிய தம்பதி கைது - நகைகளை விற்று சொகுசாக வாழ்ந்து வந்தது அம்பலம்!

 

வேலூர் காட்பாடி அருகே ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த தம்பதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் வீட்டில், கடந்த ஆகஸ்ட் 27 அன்று ஆளில்லாத நேரத்தைப் பயன்படுத்தி 36 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன.

சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த முத்துவேல் (32), பிரபாவதி (30) என்ற தம்பதியைக் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இவர்கள் பல்வேறு வெளியூர்களுக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்துத் தங்குவதையும், திருடப்பட்ட நகைகளை விற்று கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 26 சவரன் தங்க நகைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல்துறையினர் வெற்றிகரமாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.