கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய்... வெங்கட் பிரபு  மாஸ் வீடியோ !

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதையை நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகவும் சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. காலை 11.30 மணி நிலவரப்படி தவெக 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருவதால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு சிறப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், அவரது கட்சி வேட்பாளர்கள் திருச்சி கிழக்கு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், வெங்கட் பிரபுவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இன்று மாலைக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விஜய்யின் வெற்றி குறித்த பதிவுகள் உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றன.