11-ம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – மர்ம நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!
Nov 9, 2026, 13:00 IST
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சூர்யா, சில இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தியால் தாக்கியவர்கள் சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுபாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவரைத் தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.