கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.