பழம்பெரும் நடிகை மித்து முகர்ஜி காலமானார்.. திரையுலகில் சோகம் - பிரபலங்கள் இரங்கல்!
புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டாகச் சிகிச்சை பெற்று வந்த புகழ்பெற்ற பெங்காலி மற்றும் இந்தித் திரைப்பட நடிகை மித்து முகர்ஜி தனது 71-வது வயதில் காலமானார்.
'சேஷ் பார்பா' என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய மித்து முகர்ஜி, பெங்காலி திரையுலகில் 1970 மற்றும் 1980-களில் மிகமுக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் பல இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், பெங்காலி சினிமாவின் ஜாம்பவான்களான உத்தம் குமார் மற்றும் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு.
கடந்த ஒரு ஆண்டாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.