“மனித இனத்திற்கான அமைதியே உலக நாடுகளுக்கு மிக முக்கியம்” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு!

 

புதுடெல்லியில் நடைபெற்ற உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 25-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நாட்டின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உலகளாவிய அமைதி மற்றும் இந்தியாவின் பங்கு குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஒரு நாட்டின் லாபத்தைக் காட்டிலும், உலகளவில் மனித இனத்திற்கான அமைதியே மிகவும் முக்கியமானது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்திக் கூறினார்.

உலகளாவிய மோதல்களும் பதற்றங்களும் நிலவி வரும் சூழலில், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரு வலிமையான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்து வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலக அளவில் பல்வேறு மோதல்கள் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் வெற்றி உலகிற்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.