வீடியோ: முடிவுக்கு வந்த இசைச் சகாப்தம்: முழு அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

 

இந்தியத் திரையிசை உலகின் 'மெல்லிசை அரசி' என்று போற்றப்படும் மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்ரல் 12, 2026) காலமானார். அவரது மறைவு இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மும்பையில் வசித்து வந்த ஆஷா போஸ்லேவுக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்குப் பிறகு, இசை உலகின் மற்றுமொரு பெரும் தூண் சரிந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.