வீடியோ ஆதாரம் சிக்கியது.. 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... ’ஜெம்’ கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி போக்சோவில் கைது!

 

சென்னையில் தன்னார்வலர் அளித்த ரகசியப் புகாரின் அடிப்படையில், கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தன்னார்வலர் ஒருவர் அளித்த ரகசியப் புகாரின் பேரில், கிரானைட் தொழிலதிபர் வீரமணி (84) போக்சோ சட்டத்தின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதின்மூன்று வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் சிறுமிகளைப் பாலியல் குற்றங்களுக்குப் பயன்படுத்தியதும், பல முக்கிய பிரமுகர்களுக்கு அவர்களை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணியை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.