பகீர் வீடியோ... திருமண ஊர்வலத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாட்டம்... குண்டு பாய்ந்து 5 வயது சிறுவன் பலி!

 

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கொண்டாட்டத் துப்பாக்கிச் சூட்டில் எதிர்பாராதவிதமாகக் குண்டு பாய்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சுல்தான்பூர் மாவட்டம் காடிபூர் காவல் எல்லைக்குட்பட்ட ஃபுதேஹரி பாங்கே கிராமத்தைச் சேர்ந்த கிரிவர் கோபால் படேலின் 5 வயது மகன் ஆர்ஷ் படேல். இவரது உறவினர் அனுராக் படேலின் திருமணத்திற்காகச் சுராபூரில் உள்ள திருமண மண்டபத்திலிருந்து 'பாரத்' ஊர்வலம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, மணமகனின் மைத்துனரான அஜய் என்பவர் ஆர்வ மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக, அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஆர்ஷ் படேலின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தான்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/9MeEu6Qwms8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9MeEu6Qwms8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

உயிருக்குப் போராடிய சிறுவனை அவளது தாய் அம்ரிதா படேல் மற்றும் குடும்பத்தினர் உடனடியாகக் காடிபூர் சமூக சுகாதார மையத்திற்குச் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சுல்தான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அஜய் என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி, தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார்.

காடிபூர் காவல் கோட்ட அதிகாரி வினய் கௌதம் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அஜய்யைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.