“ஆபாச வீடியோ.. இனி சும்மா இருக்க மாட்டேன்..” - நடிகை சுனைனா எச்சரிக்கை!

 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை சுனைனாவின் முகத்தைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆபாசமான முறையில் சித்தரித்து இணையதளங்களில் பரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எனது அனுமதியின்றி டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டுப் பரப்பப்படும் இந்த அருவருப்பான செயல் எனக்குப் பெரும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது" எனச் சுனைனா தெரிவித்துள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/0XYES_b5a_0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/0XYES_b5a_0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இந்தச் செயல் தனியுரிமை மீறல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு ஆகும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 சட்டங்களின் கீழ் கடுமையான குற்றமாகும்.

இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், பதிவேற்றியவர்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்பவர்கள் மற்றும் மறுபதிவு செய்பவர்கள் மீதும் எவ்வித முன்னறிவிப்புமின்றி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோ உடனடியாக இணைய தளங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இதனை மேலும் பரப்பாமல் எங்கு கண்டாலும் புகார் அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திரைத்துறையைச் சேர்ந்த பெண் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகச் சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகை சுனைனா எடுத்துள்ள இந்த உறுதியான சட்டப்பூர்வமான முடிவு கவனம் பெற்றுள்ளது.