பகீர் வீடியோ... பட்டா தராமல் அலைகழித்த அதிகாரி மீது டீசல் ஊற்றி எரிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

 

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா வழங்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழித்த வருவாய் துறை அதிகாரிகள் மீது நபர் ஒருவர் திடீரென டீசலை ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டா மாறுதல் மற்றும் நிலம் தொடர்பான சான்றிதழ் கோரி மனு அளித்த நபரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், கேனில் மறைத்து எடுத்து வந்த டீசலை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மீது திடீரென ஊற்றி எரிக்க முயன்றுள்ளார்.

இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் உடனடியாகச் செயல்பட்டு அந்த நபரைத் தடுத்து நிறுத்திப் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.