"விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது.." - தமிழிசை சௌந்தரராஜன்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும், எவருடனும் கூட்டணி இல்லை என்றும் விஜய் சமீபத்தில் அறிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன், விஜய் தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாது என்று விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில், தி.மு.க போன்ற வலுவான கூட்டணியை எதிர்க்க வேண்டுமானால் ஒரு வலுவான கூட்டணி அவசியம். விஜய் போன்ற புதிய அரசியல் வருகையாளர்கள் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க-வை வீழ்த்த ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் தற்போதைய வியூகம். கடந்த மார்ச் 18-ம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நாங்கள் யாருடைய 'B' டீமும் கிடையாது. எங்களின் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் சமரசம் கிடையாது; கூட்டணி குறித்து வெளியாகும் செய்திகள் வதந்தியே" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.