முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி 52 அடி நீளக் கேக் வெட்டி தவெகவினர் கொண்டாட்டம்!

 

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது ‘முதல்’ வரலாற்றுச் சிறப்புமிக்க 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் முதலமைச்சர் விஜய்க்கு, மாநிலம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வரும் வேளையில், கன்னியாகுமரியில் அவரது வயதுக்கேற்ப 52 அடி நீளமுள்ள பிரமாண்ட கேக் வெட்டித் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது வயதில் அடி எடுத்து வைப்பதைக் குறிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத் தவெக தலைமை நிர்வாகிகள் ஒன்றிணைந்து 52 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்ட கேக்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க உயர்தரக் கலவைகளுடன் சுமார் 250 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை, மாவட்ட நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து 'தளபதி விஜய் வாழ்க' என்ற முழக்கங்களுடன் வெட்டினர்.

#WATCH | முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் 250 கிலோ எடை கொண்ட 52 அடி நீள கேக்கை வெட்டி தவெகவினர் கொண்டாட்டம்#vijaybirthday #Vijay #kannyakumari #News18TamilNadu pic.twitter.com/dpLA3S2MFc

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2026


கன்னியாகுமரி நகரின் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இந்நிழ்வில், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் ஏழை எளியோருக்கும் வெட்டப்பட்ட கேக் மற்றும் இனிப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன: ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்கள் பணிகளில் ஈடுபடுமாறு தலைமை அறிவுறுத்தியிருந்ததால், கேக் வெட்டும் நிகழ்வு முடிந்த உடனே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானப் பணிகளையும், பள்ளி மாணவர்களுக்கான இலவசக் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்களையும் தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.