ஆசியப் போட்டியில் தங்கப்பதக்கம் - வித்யா ராம்ராஜுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து, ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்ற இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆகவும், மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 52 ஆகவும் (21 வெள்ளி, 25 வெண்கலம்) உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றிருந்த வித்யா ராம்ராஜின் இந்தப் பதக்கம் அவரது மூன்றாவது சாதனையாகும்.

தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், அவரது இந்த மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.