திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி வழங்கிய விஜய்!

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மகன் முனைவர் சந்தீப் ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின்  துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 15 பேருக்குக் கட்சிப் பதவிகளைத் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பலம் வாய்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப் ஆனந்திற்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தின் மூலம் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் அதிகரித்து, எதிர்காலத் தேர்தல்களில் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என்று அரசியல் நோக்கர்கள் மற்றும் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.