அரசு ஊழியர்களை திருத்தப் போராடும் விஜய்... தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.1.18 கோடி சிக்கியது!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணமும், ஆன்லைன் மூலமான இலஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக ரூ.1.18 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தொகையில் கணக்கில் வராத ரொக்கமாக ரூ. 28.24 லட்சமும், கூகுள் பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் செய்யப்பட்ட ரூ. 89.89 லட்சம் பரிவர்த்தனைகளும் அடங்கும். இதில் குறிப்பாக சென்னை கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் ஜி-பே வழியாக ரூ.31.52 லட்சம் வரை முறைகேடான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் அம்பலமாகியுள்ளது.