விஜய்க்கு அடுத்தடுத்து சிக்கல்... கையில் ‘ஆதாரங்களுடன்’ ஊடகங்களைச் சந்திக்க சங்கீதா திட்டம்?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் ஒரு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா, ஊடகங்கள் வாயிலாகச் சில அதிரடி உண்மைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விவாகரத்து வழக்கு விசாரணைக்குப் பிறகு, சங்கீதா எடுத்துள்ளதாகச் சொல்லப்படும் இந்த முடிவு திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முன்னணி நடிகையுடனான விஜய்யின் தொடர்பு குறித்துத் தன்னிடம் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களைச் சங்கீதா வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
தமிழகத் தேர்தல் வாக்குப் பதிவுக்குச் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தச் சந்திப்பு நடக்கலாம் எனக் கூறப்படுவது, இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.
தவெக-வின் முதல் தேர்தல் களம் என்பதால் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த விஜய் தரப்புக்கு, இந்தத் தகவல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது விஜய்யின் அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் பரப்பும் திட்டமிட்ட வதந்தி என்றும், சங்கீதா அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை சங்கீதா தரப்பிலிருந்தோ அல்லது விஜய் தரப்பிலிருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஏற்கனவே தவெக வேட்பாளர்களுக்காகப் பிரபலங்கள் பிரசாரம் செய்து வரும் வேளையில், தலைவரின் குடும்ப விவகாரம் பொதுவெளியில் விவாதமானால் அது வாக்காளர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒருவேளை சங்கீதா ஊடகங்களைச் சந்தித்தால், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.