"25 ஆண்டுகள் ஆனாலும் விஜய்தான் முதல்வர்" - தவெக 100 நாள் கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த் பேச்சு!

 

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதல்வர் விஜய் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்த அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

"100 நாட்கள் சாதனை மட்டுமல்ல, இனி வரும் 25 ஆண்டுகளுக்கும் விஜய்தான் தமிழகத்தின் முதல்வராக நீடிப்பார். வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் தவெகவே தொடர் வெற்றி பெறும்" என அவர் உறுதியளித்தார்.

"நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியது போல, இந்திய நாட்டின் 100-வது சுதந்திர தின விழாவிலும் அவரே முதலமைச்சராகத் தேசியக் கொடியை ஏற்றுவார்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தவெக அரசின் முதலாண்டு மைல்கல் மற்றும் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.