சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கோரிக்கை 1980-ம் ஆண்டு முதலே நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருவதை தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடரவும், நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்கவும் டெல்லிக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் ஏற்படும் சிரமங்களையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைப்பது தென்னிந்திய மக்களுக்கு நீதியை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் சட்ட ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ள பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் கோரியுள்ளார்.நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் வலியுறுத்தலாக உள்ளது.