முதல்வர் விஜய்யை பார்க்க மின் கம்பியில் ஏறிய இளைஞர்! தம்பி கீழ இறங்குப்பா என கைகாட்டிய விஜய்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.28) மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் சாலை மார்க்கமாக சென்றபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.முதல்வர் விஜய் சென்ற வாகனத்தை பார்க்கும் ஆர்வத்தில் சாலையோரங்களில் ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, ஒருவர் சாலையோரத்தில் இருந்த மின் கம்பியில் ஏறி நின்று விஜய்யை பார்த்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த விஜய், அந்த நபர் மின் கம்பியில் இருந்து கீழே இறங்குமாறு கையசைத்து அறிவுறுத்தினார். “தம்பி கீழே இறங்குப்பா” என்று கூறுவது போல் அவர் சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கம்பியில் ஏறியிருந்த நபரை பார்த்து விஜய் கீழே இறங்குமாறு அறிவுறுத்திய இந்த காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்துள்ள விஜய், அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து அவரது மதுரை பயணத் திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
முதல்வரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், மருத்துவமனை மற்றும் அவர் பயணிக்கும் முக்கிய சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.