த்ரிஷாவுடன் நேரில் சென்று அஜித் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்!

 

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி நேற்று காலமான நிலையில், திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துபாயில் இருந்த நடிகர் அஜித், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாகத் சென்னை திரும்பியுள்ளார்.

தாயாரை இழந்து வாடும் நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு  முதல்வரும், தவெகழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், நடிகை த்ரிஷாவுடன் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மோகினி அம்மையாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

திரையுலகைச் சேர்ந்த பலபிரபலங்களும் அஜித்தின் தாயார் மறைவுக்குத் தொடர்ந்து தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்று இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ள நிலையில், அதைத் தனிப்பட்ட நிகழ்வாக நடத்த இருப்பதாக அஜித் குடும்பத்தினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.