undefined

 தவெக தலைவர் விஜய்  ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்! 

 


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகம், புதுவையில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக   விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.  
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 12 பேர் உயிரிழந்திருப்பதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பின்படி  69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


அந்த வகையில், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு, அரிசி உட்பட  நிவாரணம் பொருட்களை வழங்கி வருகின்றது. அதேபோல், சேலத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த இபிஎஸ்  கந்தம்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினார்.
இந்நிலையில் சென்னை டிபிசத்திரம் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அந்த தகவலின்படி, சுமார் 300 குடும்பங்களை  பனையூருக்கு  வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்க இருப்பதாக  கூறப்படுகிறது.


 கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், தி.மலை, கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!