இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை... நீதிமன்றத்தில் ஆஜராவாரா விஜய்?!

 

இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னையில் விஜய், சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பையிலிருந்து வந்த முக்கிய ஜோதிடர் ஒருவரின் முன்னிலையில் நடைப்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில்,  சங்கீதாவுக்கு செட்டில்மெண்ட் செய்வதாகவும், தனது மகன்,  மகளின் பராமரிப்பு செலவுகள் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் விஜய் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையில் புகைந்து கொண்டிருந்த விவாகரத்து விவகாரம், தற்போது கிளைமாக்ஸை எட்டியுள்ளது. நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதாவைப் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தனது தேர்தல் வேட்புமனுவில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி வரை செட்டில்மெண்ட் கேட்டதாகத் தெரிகிறது. மேலும், மகன் மற்றும் மகளின் எதிர்காலத்திற்காகவும் கணிசமான தொகையைக் கோரியுள்ளனர்.

மனைவிக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் தருவதாகவும், மகன் மற்றும் மகளின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், தற்போது அரசியல் பயணத்தில் முழுமையாக ஈடுபட விஜய் விரும்புவதால் இந்தப் பிரச்சனையைச் சட்டப்பூர்வமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 1999-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிய முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இன்று நீதிமன்றத்தில் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர்கள் மூலம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்பது தெரிந்து விடும். அதே சமயம் தமிழகத்தில் பிரசாரம் நாளையுடன் நிறைவடைவதும் குறிப்பிடத்தக்கது.